Monday, December 27, 2010

மனித வாழ்வுடனா இலக்கியம்.

மனிதனானவன் உணர்வுகளினால் உருவாக்கப்பட்டவன் எனவே அவனது வாழ்விற்கு முக்கியமானதொன்றாக இலக்கியம் கணப்படுகின்றது. அத்தகைய இலக்கியமானது மனித வாழ்வினை பிரதிபலிப்பதுடன் அதனை காட்சிப்படுத்துவதாகவும் அமைகின்றது. இலக்கியத்தினை வாசிப்பவன் அல்லது கேட்பவன் ஒரு காட்சியை நோக்கி நகர்த்தப்படுவதுடன் அதனுடாக பல்வேறு வழிகளில் தூண்டப்படுகின்றான். இத்தகய காட்சி மனித வாழ்வின் பல்வேறுபட்ட விடையங்களை மாத்திரமன்றி இயற்கையினையும் ஊடறுத்துச் செல்கின்றது.

எனைய கலைகளைப்போன்றே இலக்கியமும் கலைஞனின் உள்ளம் உயிர்துணரும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதன்பெறுமானம் ஆளுக்காள், காலதுக்குக் காலம், இடத்திற்கிடம் வெறுபட்டதாகும். இதன் இப்பெறுமானதை தீர்மானிப்பது மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவின் அளவாகும். அதுமாத்திரமன்றி காலம் இடம் என எவைமாறினாலும் இலக்கியத்தின் கருப்பொருளானது இவை இரண்டுமேதான்.

தற்போதைய மனித வாழ்வினை வறையறை கொண்ட ஒர் இலக்கியப் பார்வையினூடாக பார்ப்போமையானால். இலக்கியம் அதனுடைய கடமையினை கட்சிதமாக செய்திருப்பதினை அவதானிக்கலாம். எம்மால் அவதானிக்கக் கூடியதாகவும் தொட்டுணரக் கூடியவையாகவும் அமைந்திருக்கின்ற அத்தகைய இலக்கியங்கள் தான் மனிதவாழ்வின் சம்பவங்களும் காட்சிகளும் நிலைத்திருப்பதற்கு ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அது தன்னுடைய உடமையாளனின் படைப்பாற்றலையும் நேர்த்தியினையும் பிரதிபலிக்கின்றது.

ஓர் இலக்கியம் நீண்ட காலகட்டத்திற்கு நிலைத்திருக்குமானால் அதன் விளக்கத்தினை எங்கள் கற்பனைக் காட்சியினூடாகவே அதனை விளங்கவோ விளங்கப்படுத்தவே முடியுமானதாக அமைந்திருக்கும். அவ்விலக்கியத்தில் மிகுதியாக இருப்பது அதன் அழகான இலக்கியக் கருத்தும் காட்சியுமே. அவை அது உருவாக்கப்பட்ட காலத்தினை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கும்.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட இலக்கியங்களின் ஊடாகத்தான் நாம் மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் படிமுறைகளையும் அதன் வீழ்சிக்கும் எழுர்ச்சிக்கும் காரணியாய் அமைந்த அம்சங்களையும் அறிந்து கொள்கின்றோம். எனவே ஒரு சமூகத்தின் அதற்கான தனித்துவமான இலக்கியப் படைப்புகளினுடாகத்தான் அதன் இருப்பு, மனித நாகரிகத்திற்கான அதன் பங்களிப்பு, அதன் தனித்தன்மை அனைத்தினையும் அறிந்துகொள்ளலாம்.

இலக்கியமானது ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான விடையங்களினை விளங்கப்படுத்துவதேடு அதற்கான மிகச்சிறந்த உதாரணங்களையும் தருகின்றன. இலக்கியத்தின் தொடர்பில்லாமல் நேரடியாக நாம் படிப்பினை பெறுதல், புரிந்து கொள்வதைவிட இலக்கியத்துடன் அதனைச் செய்வோமேயானால் அது மிகவும் பலம் வாய்ததாக காணப்படும். ஏனெனில் அது காலத்தினால் அங்கீகரிக்கப் பட்டவையாக காணப்படுகின்றன.

இவ்வாறு மனிதவாழ்வின் எப்பகுதியினை எடுத்தாலும் அதில் இலக்கியத்தின் ஊடுருவல் கணப்படவதாகவே அமையும். இலக்கியத்தினை விட்டு மனித வாழ்கையினைப் பிரிப்போமேயானால், அவ் வாழ்கை வெற்று வார்த்தைகள், உள்ளீடற்ற வரிகள், பொருளற்ற ஓசை ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் நாம் காண முடியாது.

.....அய்யாஷ் அலி....