Sunday, July 17, 2011

திசை தேடி


காதோரம் ஏதோ
புல்லரிப்பு
இரவின் நீட்ச்சி
இமையத்தின் எல்லைவரை
களைகட்டுகின்றது.

சத்தியத்தினை வருகையை
உள்ளம்
யாசிக்கின்றது

போதையின்
தழும்பலில்
சத்தியம் தேடி
தலையணை
கண்ணீர் சரக்கின்றது

விடியற் காலையில்
விடியா
இரவகளைத் தேடி
உளக்குமுறல்
பாதையாத்திரை

கதிரவனின் ஒளியில்
எங்கோ ஒரு மூலையில்
சபதங்களின் அவலக்குரல்
காதுகளில் நச்சரிப்பு

கடலலையாய்
வயலைகள்
இருப்பினை அரித்து
திசை தெரியா
சருகுகளாய்
உளநடைகள்

இவையனைத்தும்
கலங்கரை விளக்காய்
மின்னி மின்னி மறையும்
சில ஒளிக்கீற்றுகளிடையே





Thursday, July 7, 2011

எனக்கு என்ன நிகழ்தது மண்ணறையில் நிற்கின்றேன்.

தன் மனைவியின் மண்ணறையின் முன் கடைசி நிமிட காவியங்கள் வாசிக்கும் அவளின் நேசத்துக்குரியவன்.

எனக்கு என்ன
நடந்தது????
எனக்கு என்ன
நடந்தது??????
நான்
மண்ணறையின்
அருகாமையில்
அமைதியாக நிற்கின்றேன்

அன்புக்குரியவளின்
மண்ணறையே
ஏன் எனக்கு
பதிலளிக்கமாட்டாய்???

அன்பிற்குரியவளே
என்ன நிகழ்ந்தது
உமக்கு
பதிலளிக்காமல் இருக்கின்றாயே???????

நேசத்திற்குரியவளே
நட்பினை
மறந்துவிட்டாயா???

என்னவள் சொன்னாள் -
உங்களுக்கு
நான்
எவ்வாறு பதிலளிப்பது!!!!

நானோ
கற்களாலும் மண்ணாலும்
பாதுகாக்கப்பட்டவள்

எனது அழகை
மண் தின்றுவிடும்
நானோ
உங்களை மறந்துவிடுவேன்

என் குடும்பம்
சமவயதுத் தோழிகளை
விட்டும்
தடுக்கப்பட்டு விட்டேன்

என்னையும்
உங்களையும் விட்டு
நேசத்துக்குரிய நட்பு
துண்டிக்கப்பட்டு விட்டது
உங்கள் மீது
சாந்தி உண்டாகட்டும்!!!!!!!!





Monday, July 4, 2011

எனது சிறிய உள்ளம்

இம் மண்ணில் பிறந்த போது
வெறுமையான
சிறிய உள்ளத்தை தந்தாய்
உன் மீதான தூய்மையான
காதலில் மூழ்கடித்தேன்

நீதான் என் காதலன்
நீதான் என் உரிமையாளன்

என் உள்ளத்திலோ
உன்மீதான காதல்
பிரவாகிக்கின்றது

உன்
நெருக்கமே என் சந்தோசம்
உன் திருப்தியே
என் விருப்பம்
இவற்றையே
நான் வேண்டுகின்றேன்

உன் ஞாபகத்திலே
என் உள்ளம்
சாந்தியடைகின்றது
என் உயர்வான
ஆட்சியாளனே

நான்
உன்னையே அழைக்கின்றேன்....
உன்னையே புகழ்கின்றேன்...........
உன் கிருபையினையே
யாசிக்கின்றேன்..........

என்னை
நேர்வழிப்படுத்தியதற்காய்
உன்னை புகழ்கின்றேன்

என் உள்ளமோ
உன் ஞாபகத்தால்
அச்சமடைகின்றது

உன்
வார்த்தைகளை உணர்ந்து
அடிபணிவதற்காள்
எனது உள்ளத்தை
இச்தீரப்படுத்துவாயாக
ஆமீன்!!!!!!!.............








Friday, July 1, 2011

அடியான்

நானோ
பாவங்களைச் சம்பாதித்து
மன்னிப்பாய்
என்ற நப்பாசையால்
பாவமீட்சியைத் தவிர்ந்த
அடியான்

அகிலதின்
ஆட்சியாளனே!!
ஒருவன் அவதானிக்கின்றான்
என்ற பயமற்ற
பட்டோலை எழுதப்பட்ட
அடியான்

கிருபையுடையவனே
இரகசியமாக பாவங்கள்
செய்த
பாவினான்

எனக்கு என்ன நிகழ்தது..........
துக்கத்தை
வெளியாக்காமல்
இருக்கின்றேனே........















கிருபையுடையவனே
வாழ்வை வீணடித்த
சிறியோரோ பெரியோரோ
மதியா
ஊதாரி நான்

அகிலத்தை காப்பவனே
கொந்தழிக்கும் கடலில்
விடைகிடைக்காதோ
என அலறியவனாய்
முழ்கின்றேன்

அருளாளனே
நானோ
பாவங்களினால் பீடிக்கப்பட்ட
நோயாளி
எனக்கே அநீதியிழைத்து
ஓட்டாண்டியாய் நிற்கின்றேன்

என் அருளாளனே
மறைவான தவறவறால்
கவலைகொண்டு
நம்பிகையிழந்து
பித்தனாய் கிறங்கி
நிற்கின்றேன்


என்னைப் படைத்தவனே!!
உன் வாயலின் பால்
திரும்பியவனாய் நிற்கின்றேன்
என்பாவங்களை முன்வைத்து
மன்றாடுகின்றேன்
என்னை மன்னிப்பாயாக!!!!!!!!!!
ஆமீன்.............





Friday, June 24, 2011

விடியல்

சம்மட்டியால் அடிபட்டு
உணர்விழந்து கிடக்கின்றேன்
ஒவ்வொரு விடியலும்
இராட்சசனாய்

என் உடலோ
எனக்குச் சுமையாய்
தழ்ழாடுகின்றேன்
ஊன்றுகோல் நாடினேன்
என் கண்ணில்
பட்டதெல்லாம்
உழுத்துப் போன கோல்கள் தான்

.....அய்யாஷ் அலி....



Wednesday, June 22, 2011

அன்புள்ளம் கொண்டவனே

என் மனச் சோலையில்
மலர்ந்து மணம் வீசும்
அன்புள்ளம் கொண்டவனே
நட்பெனும் செடி வளர்ந்திட
நாளும் பொழிவாய் பாசமெனும் மழைநீரை
பிரிவின்றி என்றுமே
சேர்ந்தே வாழ்ந்திட
நாழும் பிரார்த்திப்பாய்
வல்ல இறைவனை.......................





Saturday, January 1, 2011

திருப்தி

எவன் தன்னுடைய பலத்தில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் மிகைக்கப்படும். எவன் தன் புகழில் திருப்தியடைகின்றானோ அது ஒரு நாள் அவனை விட்டுச் சென்றுவிடும்.