Monday, May 7, 2012

கடைசிக் கொத்து


மறதியை
உன்
விருப்பின் படியே
செய்துகொள்
மலர்ப் பூங்கா
ஒருபோதும்
எம்மை ஞாபகப்படுத்தாது

உன்
கண்களோ
இகழப்பட்ட
சுத்தமான 
தேனின் சுவையை
உறுஞ்சுகின்றன


ஒளிபுகா
நீல இரத்தினம்
அதன் கரையைவிட்டு
ஒருபோதும் நீங்காது

உன்னை
ஒட்டிக் கொண்டிருப்பதோ
வஞ்ககம் செய்கின்றது
பேரலை போன்ற
அந்த வெட்கத்தினை
துறந்துவிடு

கடினமான
சக்திமிக்க
அந்தக் குன்றை
துவள் துவளாக நொறிக்கிவிடு

பூக்கள் இங்கே
இருக்கும் காலமெல்லாம்
காத்திரு

நீ
எனது மெல்லிய
கனவுகளை
கண்டுகொள்ளவில்லை

மெல்லத் தூறும்
துக்கமான மழை
எதிர்பார்பவர்களின்
எதிர்பார்பினை
நிறைவேற்றுவதில்லை

நெருப்புப் பிழம்பையுடைய 
வேட்கைகொண்ட குதிரை
அதன் தங்குமிடத்தை
விட்டு விரண்டால்

சிறிய தடியால்
எவ்வாறு
இருப்பிடத்தை
அடையச்செய்வது

அன்புன்தான்






No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets