Thursday, April 26, 2012

மீண்டும் சந்திப்போம்!!!!!!!!

உன் கூந்தலே
என் இதையத்தை திருடிவிட்டது
உன் கண்ணகள் என் மனதில்
ஆழக் காயப்படுத்திவிட்டன

உன்நோடு வாழ
எதனையும் தாங்கத்  தயார்

எமது அன்பு
இருளிலும் நிலைத்திருக்கலாம்
வருடங்கள் பலவானாலும்
எதனாலும் மாற்ற முடியாது
எதுவாகயிருந்தாலும்





Sunday, April 15, 2012

அந்திம காலம்


நானோ ஒரு கெட்ட கனவில் இருக்கிறேன்
பூமியின் முடிவிலே இருந்தேன்
போரின் பின்னரான
அந்த காலைபொழுது
நான் எதையும் கேட்கவில்லை
யாருமே அங்கு இல்லை

நான் நேசித்தவர்ளின் அன்பால் சூழப்பட்டு
அமைதியாக வாழ்கின்றேன்
இருந்தும்
நாளை என்ன நடக்கும் என்பதை அறியேன்!!!!!!!


அழகான நட்சத்திரம்
ம்
அதை யாராலும் அழிக்க முடியாது


அது அழகாகத் தூங்குகின்றது
அதை எமது பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமே

நான் இழந்தவையோ
அதிகம்
அவை என்னவேன்றே மறந்துவிட்டேன்

அன்பாய் வேண்டுகின்றேன்
எனக்காக இந்த நீல வானத்தையாவது விட்டுவிடுங்கள்
நான் கத்த வேண்டுமல்லவா?????


அழகான நட்சத்திரம்
எப்போது இந்த வெளிச்சம் பிறந்தது!!


அதன் ஆரம்பமோ
மிக தொலைவானது

அதை அறியும்
எந்த வழியும் எமக்கில்லை


அழகான நட்சத்திரம்
அதை யாராலும் அழிக்க முடியாது
அது அழகாகத் தூங்குகின்றது
அதை எமது பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமே





Sunday, July 17, 2011

திசை தேடி


காதோரம் ஏதோ
புல்லரிப்பு
இரவின் நீட்ச்சி
இமையத்தின் எல்லைவரை
களைகட்டுகின்றது.

சத்தியத்தினை வருகையை
உள்ளம்
யாசிக்கின்றது

போதையின்
தழும்பலில்
சத்தியம் தேடி
தலையணை
கண்ணீர் சரக்கின்றது

விடியற் காலையில்
விடியா
இரவகளைத் தேடி
உளக்குமுறல்
பாதையாத்திரை

கதிரவனின் ஒளியில்
எங்கோ ஒரு மூலையில்
சபதங்களின் அவலக்குரல்
காதுகளில் நச்சரிப்பு

கடலலையாய்
வயலைகள்
இருப்பினை அரித்து
திசை தெரியா
சருகுகளாய்
உளநடைகள்

இவையனைத்தும்
கலங்கரை விளக்காய்
மின்னி மின்னி மறையும்
சில ஒளிக்கீற்றுகளிடையே





Thursday, July 7, 2011

எனக்கு என்ன நிகழ்தது மண்ணறையில் நிற்கின்றேன்.

தன் மனைவியின் மண்ணறையின் முன் கடைசி நிமிட காவியங்கள் வாசிக்கும் அவளின் நேசத்துக்குரியவன்.

எனக்கு என்ன
நடந்தது????
எனக்கு என்ன
நடந்தது??????
நான்
மண்ணறையின்
அருகாமையில்
அமைதியாக நிற்கின்றேன்

அன்புக்குரியவளின்
மண்ணறையே
ஏன் எனக்கு
பதிலளிக்கமாட்டாய்???

அன்பிற்குரியவளே
என்ன நிகழ்ந்தது
உமக்கு
பதிலளிக்காமல் இருக்கின்றாயே???????

நேசத்திற்குரியவளே
நட்பினை
மறந்துவிட்டாயா???

என்னவள் சொன்னாள் -
உங்களுக்கு
நான்
எவ்வாறு பதிலளிப்பது!!!!

நானோ
கற்களாலும் மண்ணாலும்
பாதுகாக்கப்பட்டவள்

எனது அழகை
மண் தின்றுவிடும்
நானோ
உங்களை மறந்துவிடுவேன்

என் குடும்பம்
சமவயதுத் தோழிகளை
விட்டும்
தடுக்கப்பட்டு விட்டேன்

என்னையும்
உங்களையும் விட்டு
நேசத்துக்குரிய நட்பு
துண்டிக்கப்பட்டு விட்டது
உங்கள் மீது
சாந்தி உண்டாகட்டும்!!!!!!!!