அன்பு பயம்
இதன் மிகுதியோ
பெருமை மட்டுமே
கண்ணீர்
இரவுள் மட்டுமே
வார்த்தைகள் அனைத்தும்
என்னைவிட்டு தொலைந்தபின்
ஒரு மின்குமிழுடனான கதிரையே
எனதான வாசச்தலம்
உனதான நினைவுகளின் பின்
கனவு
பத்திரமாய் வீடுதிரும்பும்
உனதான வருகையை யாசித்து
தூக்கம்
நாளைய வாழ்விற்கான
காத்திருப்பு
எதிர்பார்புகளின் பின்
உனது அன்பின் நினைவுகளினுடான
சந்தோஷம்
நம்பிக்கை
என்னைவிட்டு அகன்றபின்
நாநோ ஓரு கல்
சிந்தனைகளால் தாக்கமடையா
அனைத்துத் தியாகங்களும்
பசி - வலி
ஆர்வம் - வாக்குறுதி
நச்டம் - இலபத்தினுடே
உன்மீது
எனதான அன்பினைத்தவிர
இங்கே வேறோன்றில்லை
தடைகளைவிட்டும்
உன்னை மீட்பதில்
காற்றுடன் எது காத்திருக்கின்றது?
அதனுடன் நீ போராடு!!!!!!!!


No comments:
Click Here To add Comment
Post a Comment
Blogger Widgets